Posts

Sambar/Kuzhambu Podi (powder)

This is the method, my mom makes Sambar Powder, which can be used to make Vathakuzhambu, Sambar and also to give spiciness to vegetables like lady's finger etc. Ingredients: Coriander seeds - 2 cups Thuvar dhal- 1 cup Red Chillies - 4 cups if small round ones, 7 cups if it is thin long ones. Methi seeds - 1/4 cup Asafodieta Piece - 1 inch Method to make Sambar/Kuzhambu Powder: Dry Roast all the ingredients till the aroma is released. Grind them into a fine powder in flour mill. To get the same recipe in Tamil click here

Sambhar powder|Kuzhambu Podi recipe|குழம்பு பொடி

தனியா - இரண்டரை கப் துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒவ்வொன்றும் அரை கப் மிளகாய் வற்றல் - (குண்டு மிளகாய் வற்றல் - நான்கு கப், ஒல்லி மிளகாய் வற்றல் ஆறு அல்லது ஏழு கப்) வெந்தயம் - கால் கப் ஜீரகம் - கால் கப் கட்டி பெருங்காயம் - சிறிதளவு எல்லா பொருட்களையும் தனி தனியாக வறுத்து நல்ல நைசாக அரிது வைத்து கொள்ளவும். இந்த பொடியை கறி, வற்றல் குழம்பு, பருப்பு குழம்பு எல்லா வற்றிற்கும் உபயோகப் படுத்தலாம்

Recipe for Rasam Powder in Tamil|ரச பொடி

இந்த முறையிலான ரசபொடி, என்னுடைய அம்மா சொல்லி குடுத்து. அவர்கள் பல வருடமாக இந்த முறையில் பொடி செய்து தயாரிக்கும் ரசம், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். தனியா - மூன்று கப் துவரம் பருப்பு - ஒன்னே முக்கால் கப் மிளகாய் வற்றல் - ஒன்றரை கப் மிளகு - ஒரு கப் சீரகம் - முக்கால் கப் பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி சிறிது மஞ்சள் பொடி (மிளகாய் வற்றல் ஒல்லியாக இருந்தால் மூன்று கப் போட்டு கொள்ளலாம்) மஞ்சள் பொடியை தவிர மாற்ற அனைத்தையும் தனி தனியாக கருகாமல் பச்சை வாசனை போக வருது எடுத்து ஒன்றாக மிக்சியில் நைசாக அரைக்கவும்.

காரட் அல்வா - மைக்ரோவேவ்

துருவிய காரட் - இரண்டு கப் பால் - ஒன்றரை கப் சர்க்கரை - ஒரு கப் வறுத்த முந்திரி - இரண்டு ஸ்பூன் நெய் - இரண்டு ஸ்பூன் காரட் பால் இரண்டையும், ஆழமான மைக்ரோவேவ் பத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி விடவும். இரண்டும் சேர்ந்து அரை பாத்திர அளவே இருக்க வேண்டும். அதனால் நல்ல ஆழமான பத்திரமாக எடுத்து கொள்ளவும். மைக்ரோ ஹையில் எட்டு நிமிடங்கள் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் ஸ்டாண்டிங் டைம் குடுத்து வெளியில் எடுக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் எட்டு நிமிடம் வைக்கவும். மூன்று நிமிடம் ஸ்டாண்டிங் டைம் குடுத்து பின்னர் அதில் நெய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும். இதை சூடாகும் சாபிடலாம், சில் என சாபிடாலும் நன்றாக இருக்கும்.

இரண்டு பேருக்கு தேவையானவை

இன்றைய கால கட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் தனியாக இருக்கின்றனர். வெளியில் வாங்கி சாப்பிட தேவை இல்லாமல் அவர்களே சமைத்து சாப்பிட சில எளிய குறிப்புகள் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து அளவுகளும் இருவருக்கான அளவுகள். இதை கூட்டியோ குரியிதோ உபயோக படுத்தலாம் சாதம்: இரண்டரை கப் பருப்பு - ரசம் மட்டும் வைக்க அரை கப், சாம்பார் வைப்பதாக இருந்தால் ஒன்னேகால் கப் இட்லிக்கு : மிக்சியில் அரைப்பதாக இருந்தால் ஒரு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் ஒன்றரை கப் புழுங்கல் அரிசிக்கு முக்கால் கப் குண்டு உளுத்தம் பருப்பு தோசைக்கு : இரண்டு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு இட்லி அல்லது தோசைக்கு அரைக்கும் போது உளுந்தை முதலில் அரைத்து விட்டு பின்னர் அரிசியை அரிது உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும். இட்லி தோசைக்கு சேர்த்து அரைக்க வேண்டும் எனில் மேலே கூறியுள்ள படி இட்ல்ய்க்கான அளவு போட்டு, அரிசியை நன்கு நைசாக அரைக்க வேண்டும். உளுந்து மாவு நன்கு

மாம்பழ மில்க் ஷேக்

நன்கு பழுத்த மாம்பழம் - இரண்டு (நல்ல விழுதாக அரைத்து கொள்ளவும்) பால் - ஒரு லிட்டர் (முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்) சர்க்கரை - எட்டு டேபிள் ஸ்பூன் ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு பாலை நன்றாக ஆற விடவும். பாதி அளவு மாம்பழ சாறு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் அதில் பாக்கி உள்ளவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி, சில் என்று பரிமாறவும்

சப்போட்டா மில்க் ஷேக்

இரண்டு டம்ளர் மில்க் ஷேக் செய்ய தேவையானவை: சப்போட்டா நான்கு நறுக்கியது பால் அரை லிட்டர் சர்க்கரை தேவையான அளவு ஐஸ் கியூப்ஸ் ஆறு பாதி அளவு பால் எடுத்து சப்போட்டவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்கு விழுதானவுடன், மீதமிருக்கும் பால் சர்க்கரை சேர்த்து திரும்பவும் அரைக்கவும். பின்னர் அதில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும்