வெஞ்சனம் செய்முறை - Recipe for Venjanam in Tamil

இது ஒரு பரம்பரையாகக் கிடைத்த உணவுப் பதார்த்தம் ஆகும். ரெண்டு பேருக்கு தேவையான அளவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • புளி - ஒரு எலுமிச்சை பழம் அளவு
  • மிளகாய் வற்றல் - 10 முதல் 12 வரை (காரத்திற்கேற்ப)
  • தனியா - 2 ஸ்பூன்
  • கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  • மிளகு - 1/4 ஸ்பூன்
  • ஜீரகம் - 1 ஸ்பூன்
  • துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு or தட்டை பருப்பு - 1/2 ஆழாக்கு (இதனை அவரை பருப்பு என்றும் அழைப்பர் )
  • தேங்காய் - 1 நன்கு துருவி
  • சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
  • பெரிய வெங்காயம் - 2
  • கத்திரிக்காய் - 1/4 to 1/2 கிலோ (வாழைக்காய், கொத்தவரை, அவரை போன்ற காய்களும் பயன்படுத்தலாம்)

செய்முறை:

  1. வறுக்குதல்:

    • தனியா, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், ஜீரகம் ஆகியவற்றை தனித் தனியாக நல்லெண்ணையில் வறுக்கவும்.
    • பெரிய வெங்காயத்தை நறுக்கி வறுத்து வறுத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து, துருவிய தேங்கையுடனும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைப்பது நைசாக இல்லாமல், நற நற என்று இருக்க வேண்டும்.
  2. துவரம் பருப்பு:

    • துவரம் பருப்பை நன்கு குழைய வேக விடவும்.
  3. சின்ன வெங்காயம்:

    • சின்ன வெங்காயத்தை நல்லெண்ணையில் வதக்கி கொள்ளவும்.
  4. புளி மற்றும் காய்கறிகள்:

    • புளியை கரைத்து, அது கொதிக்கும் போது, வதக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கத்திரிக்கையை சேர்க்கவும்.
    • புளி தண்ணீரில் உப்பு சேர்த்து வேக விடவும்.
    • புளியின் பச்சை வாசனை போன உடன், அரைத்த விழுது மற்றும் நன்கு கரைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
    • கொதித்து நுரைத்து வந்த உடன், இறக்கி, கறிவேப்பிலை போட்டு அதன் தலையில் தாளித்து கொட்டவும்.
  5. பருப்பு:

    • அவரைப் பருப்பை - தட்டைப் பருப்பை சேர்த்து வெஞ்சனம் வைத்தால் இன்னும் மிகவும் சுவையாக இருக்கும்.
  6. காய்கறிகள்:

    • வெங்காயம் மற்றும் கத்திரிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
    • சின்ன வெங்காயம் அதிக சுவையைக் கொடுக்கும.

குறிப்புகள்:

  • மிளகு, ஜீரகம், மற்றும் அவரைப் பருப்பு சேர்க்கப்பட்டால் இந்த உணவுக்கு வெஞ்சனம் (வெஞ்சகம்) என்று பெயர்.
  • இந்த உணவு விவசாயிகள் உண்ணும் உணவு. இது கெட்டியாக செய்து களியுடன் சாப்பிடுவது வழக்கம்.

இது ஒரு சுவையான மற்றும் பாரம்பரிய உணவு. செய்து பார்த்து மகிழுங்கள்!

Comments