குழந்தைகளுக்கு இட்லி தோசையுடன் பெரியவர்களைப்போல் மிளகாய் பொடி போட்டு சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அதனால் பல வீட்டில் சட்னி சாம்பாரோடு மிளகாய் பொடியும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு : ஒரு கப்
கடலை பருப்பு : ஒரு கப்
மிளகாய் வற்றல்: 20 - 40 (தேவையான அளவு)
பெருங்காயம் : ஒரு சின்ன ஸ்பூன் பொடியாக இருந்தால் (அல்லது)
கட்டி பெருங்காயம் : ஒரு சின்ன துண்டு
உப்பு : அவரவர் தேவைக்கேற்ப
செய்முறை:
எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக ஒரு ஸ்பூன் எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கட்டி பெருங்கயமாக இருந்தால் மட்டும் வறுக்கலாம் பொடியாக இருந்தால் அப்படியே போடலாம்.
சிறிது ஆறியவுடன் முதலில் மிளகாயையும் பின் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் கர கரப்பாக அரைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகப்படுத்தலாம்.
நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைக்கவும்.
Comments