கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்று சொல்வார்கள். உடல் இளைப்பதற்கு கொள்ளு உண்பது மிகவும் நல்லது.
எந்த வித பக்க விளைவும் இல்லாமல் உடம்பை இளைக்க வைப்பது கொள்ளு ஒன்று தான்.
சரி கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
மிளகாய் வற்றல் - 5 - 10 ((கொள்ளு அளவிற்கேற்றவாறு)
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு (கட்டியாக இருந்தால்)
உப்பு - தேவைக்கேற்ப
உப்பை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக வாணலியில் எண்ணை விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் நன்கு ஆறியவுடன் உப்பையும் சேர்த்து வைத்து மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகிக்கலாம்.
நல்ல சூடான சதத்தில் நெய்யோ நல்லெண்ணையோ விட்டு இந்த பொடியை தேவையான அளவு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
உடம்பில் தேவையற்ற கொழுப்பு குறைந்து அழகும் கூடும்.
Comments