சீர் + அகம் (உடல்) = சீரகம் என்று சொல்வார்கள். வெளி உடம்பை அழகாக்க பலவித பௌடர்களை போடும் நாம்
உள் உடம்பை பாதுகாக்க இந்த பொடியை கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை செய்வது மிகவும் எளிது.
எவ்வளவு பொடி தேவையோ அந்த அளவு அல்லது குறைந்தது ஒரு 100 கிராமாவது சீரகத்தை வாங்கி வெய்யிலில் காய
வைத்து எண்ணை விடாமல் வாசனை வரும் வரை வறுத்து ஆறியவுடன் மிக்சியில் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு
வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
சப்பாத்திக்கு செய்யும் எல்லா சைடு டிஷ்களிலும் சீரக பொடி சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கூடும்.
லஸ்ஸி, நீர் மோர் வகைகளுக்கும் ஏற்றது. சாட் வகைகளில் சேர்க்கப்படும் ஸ்வீட் சட்னிகளில் நிச்சயம் இதை சேர்க்க வேண்டும்.
அப்போதுதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாகிவிடும்.
Comments