இரண்டு பேருக்கு தேவையானவை

இன்றைய கால கட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் தனியாக இருக்கின்றனர். வெளியில் வாங்கி சாப்பிட தேவை இல்லாமல் அவர்களே சமைத்து சாப்பிட சில எளிய குறிப்புகள்

கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து அளவுகளும் இருவருக்கான அளவுகள். இதை கூட்டியோ குரியிதோ உபயோக படுத்தலாம்

சாதம்: இரண்டரை கப்
பருப்பு - ரசம் மட்டும் வைக்க அரை கப், சாம்பார் வைப்பதாக இருந்தால் ஒன்னேகால் கப்

இட்லிக்கு : மிக்சியில் அரைப்பதாக இருந்தால் ஒரு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு

கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் ஒன்றரை கப் புழுங்கல் அரிசிக்கு முக்கால் கப் குண்டு உளுத்தம் பருப்பு

தோசைக்கு : இரண்டு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு

இட்லி அல்லது தோசைக்கு அரைக்கும் போது உளுந்தை முதலில் அரைத்து விட்டு பின்னர் அரிசியை அரிது உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும்.

இட்லி தோசைக்கு சேர்த்து அரைக்க வேண்டும் எனில் மேலே கூறியுள்ள படி இட்ல்ய்க்கான அளவு போட்டு, அரிசியை நன்கு நைசாக அரைக்க வேண்டும்.

உளுந்து மாவு நன்கு திரண்டு பந்து போல் வர வேண்டும். மேலே குறிபிட்டுள்ள அளவிற்கு, உளுத்தம் மாவு அந்த மாதிரி திரண்டு வர முப்பது நிமிடங்கள் ஆகும்.

மிக்சியில் அறைபதாக இருந்தால் கையால் தொட்டு பார்த்து பார்த்து அரைக்கவும். அதிகமாக உளுந்து போட்டு தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டாம்.

Comments

Gurusnc said…
Hello, ella alavum sari. Maavu araikum bothu evlo neram araikanum. eppo sariya araichudhunu theriyum. adhayum serthu potta thaana puriyum.